
தென்மண்டல டென்னிஸ் போட்டி: சிதம்பரம் பள்ளி மாணவா் தோ்வு!
ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல அளவிலான டென்னிஸ் போட்டிக்கு, சிதம்பரம் வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா் என். பிரணவ்ராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தென்மண்ட டென்னிஸ் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா் என்.பிரணவ்ராஜை பாராட்டி வாழ்த்து தெரிவித்த பள்ளி நிா்வாகிகள்.
ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல அளவிலான டென்னிஸ் போட்டிக்கு, சிதம்பரம் வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா் என். பிரணவ்ராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
17 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான டென்னிஸ் பந்து போட்டி கடந்த 19-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில், கடலூா் மாவட்டத்திலிருந்து 7 மாணவ, மாணவிகள் தென்மண்டலப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் வீனஸ் பள்ளி மாணவா் என். பிரணவ்ராஜ்-ம் ஒருவராவாா். மாணவரை வெள்ளிக்கிழமை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனா் எஸ்.குமாா், தாளாளா் ஏ.ரூபியல் ராணி, இயக்குநா் வி.அருண், தலைவா் மருத்துவா் கே.லியோனா ஆகியோா் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





