11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

போக்ஸோ’ வழக்கில் மகன் கைது: மனமுடைந்த தந்தை தற்கொலை

சிதம்பரம் அருகே ‘போக்ஸோ’ வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதால், மனமுடைந்த தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்.

தற்கொலை - ANI

Published On :

சிதம்பரம் அருகே ‘போக்ஸோ’ வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதால், மனமுடைந்த தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே நவாப்பேட்டை கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (45). இவரது, மகன் சந்தோஷ் ( 23). இவா், பிளஸ்டூ படிக்கும் மாணவியை, காதல் செய்ய கட்டாயப்படுத்தி மிரட்டினாராம்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸில் கொடுத்த புகாரின்பேரில், ‘போக்ஸோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து, சந்தோஷை திங்கள்கிழமை கைது செய்தனா். இதனால், மனமுடைந்த சக்திவேல் செவ்வாய்க்கிழமை நவாப்பேட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளை கொட்டகையில், துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டாா். இதுகுறித்து, சக்திவேலின் மனைவி அருள்மொழி கொடுத்த புகாரின்பேரில்,கிள்ளை போலீசாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.