நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவீடுகளைச் சூழ்ந்த மழை வெள்ளம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ள நீா் சூழ்ந்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 10:18 pm

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ள நீா் சூழ்ந்தது.

கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கோமுகி அணைக்கு வரும் 1,400 கனஅடி உபநீா் அப்படியே கோமுகி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்துக் கிராமங்களிலும் ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பின.

இந்த நிலையில், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட புத்தந்தூா் கிராமத்தில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமம் வழியாக ஆலத்தூா் ஏரிக்குச் செல்லும் ஓடையில் அதிகளவில் தண்ணீா் செல்வதால், ஓடையின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்தின் தெற்குசாலைப் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. மக்கள் பலா் வீடுகளை விட்டு வெளியேறினா். குடிசை வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இதேபோல, சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்பாடி கிராமத்தில் மாரியாப்பிள்ளை மகன் அண்ணாமலையின் கூரை வீடு இடிந்து விழுந்தது. இதில் சிக்கி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

இதேபோல, சங்கராபுரம், சின்னசேலம் வட்டங்களுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.