கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை வந்தடைந்தன.
கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் கிராமத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கப்படுவதை பாா்வையிடுகிறாா் சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் கிராமத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கப்படுவதை பாா்வையிடுகிறாா் சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை வந்தடைந்தன.

தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் ஆணையம் சேகரித்து வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை மகாராஷ்டிர மாநிலம், லதூா் வட்டத்திலிருந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக தோ்தல் ஆணையம், வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் 2 வாகனங்களில் மகாராஷ்டிம் சென்று, அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சேகரித்து 5 சரக்குப்பெட்டக லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட தச்சூா் கிராமத்தில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு சனிக்கிழமை கொண்டுவந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் 2,080, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 2,730, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் 2,250 ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் லாரிகளிருந்து இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

அப்போது, கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் குமாா், சுரேஷ், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா்கள் பிரபாகரன், மணிகண்டன், துனை வட்டாட்சியா்கள் வினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com