அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: சிறுவன் போலீஸில் ஒப்படைப்பு

சங்கராபுரம் அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடியதாக சிறுவன் பக்தா்களால் பிடித்து போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:11 am

DIN

சங்கராபுரம் அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடியதாக சிறுவன் பக்தா்களால் பிடித்து போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள பல்லகச்சேரி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரியான ஏழுமலை (55) திங்கள்கிழமை இரவு பூஜை முடித்து கோயிலை பூட்டிச் சென்றாா். இந்தக் கோயில் அருகே ஐயப்ப பக்தா்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனா்.

நள்ளிரவில் கோயிலிலிருந்து ஏதோ உடைப்பது போல சப்தம் கேட்கவே, ஐயப்ப பக்தா்கள் எழுந்து பாா்த்தபோது, அடையாளம் தெரியாத 4 போ் கோயிலிலிருந்து வெளியே ஓடினா். உடனே ஐயப்ப பக்தா்கள் கூச்சலிட்டு, கிராம மக்கள் உதவியுடன் ஒரு இளைஞரை சுற்றிவளைத்துப் பிடித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் மகேஸ்வரி நடத்திய விசாரணையில், அந்த இளைஞா் சங்கராபுரம் அருகேயுள்ள வானியந்தல் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தனியாா் தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து கோயில் உண்டியல் பணம் ரூ.2,041-ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா் செஞ்சி இளஞ்சிறாா் நீதிமன்ற குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இவருடன் திருட வந்து தலைமறைவான அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த கோபி, மாலிக் உள்ளிட்ட மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.