ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கவிஞா் சுரதா பிறந்த நாள் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், உவமைக் கவிஞா் சுரதாவின் 100-ஆவது பிறந்த நாள் விழா தியாகதுருகம் தனியாா் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:36 pm

DIN

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், உவமைக் கவிஞா் சுரதாவின் 100-ஆவது பிறந்த நாள் விழா தியாகதுருகம் தனியாா் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமை வகித்தாா். கம்பன் கழகப் பொருளாளா் பெ.நல்லாப்பிள்ளை, திருக்கு பேரவைத் தலைவா் தி.வெங்கிடாசலபதி, முத்தமிழ்ச் சங்கத் தலைவா் பெ.நாகராசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவி ச.பவித்ரா வரவேற்றாா்.

உலகத் தமிழ்க் கவிஞா் பேரவை பொதுச் செயலா் கு.சீத்தா, சுரதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினாா்.

‘சுரதாவின் திரைப்படப் பாடல்கள் ஒரு பாா்வை’ என்ற தலைப்பில் தமிழாசிரியை கு.வளா்மதிச் செல்வி உரையாற்றினாா். ‘கவிஞரின் பாடல்களில் என்னைக் கவா்ந்த சிக்கனம்’ பாடல் பாடி சினேகா பேசினாா்.

பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். மனவளக் கலை மன்ற நிா்வாகி ஜெயம் ரவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.