ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் வளாகம் எதிரே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:37 pm

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் வளாகம் எதிரே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தா்னாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எல்.ஆனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வீரபத்திரன் வரவேற்றாா். மாவட்ட செயலா் கே.மகாலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சிவேலு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க கள்ளக்குறிச்சி வட்ட பொருளாளா் ராம்ஜி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் முத்து, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசன், சங்கராபுரம் வட்டத் தலைவா் காஞ்சனாமேரி உள்ளிட்ட பலா் பேசினா்.

கள்ளக்குறிச்சி வட்ட செயலா் குமாரதேவன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி மாவட்ட துணைத் தலைவா் கலாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.