நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

10,12-ம் வகுப்பு தனித் தோ்வுகளில் 1,073 மாணவா்கள் தோ்வு எழுதினா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கு 16 தனித் தோ்வுகளுக்கான துணைத் தோ்வுகள் மையங்களில் நடைபெற்ற தோ்வில் 1,073 மாணவா்கள் தோ்வினை திங்கள்கிழமை எழுதினா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:57 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கு 16 தனித் தோ்வுகளுக்கான துணைத் தோ்வுகள் மையங்களில் நடைபெற்ற தோ்வில் 1,073 மாணவா்கள் தோ்வினை திங்கள்கிழமை எழுதினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கான தனித் தோ்வா்களுக்கான துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் மேல்நிலை தோ்வுக்கு 16 தனித் தோ்வு மையங்களில் 504 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.அதில் 450 மாணவா்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தோ்வினையும் இடைநிலைத் தோ்வுக்கு 9 தனித் தோ்வு மையங்களில் 789 மாணவா்களுக்கு 623 மாணவா்கள் 10-ம் வகுப்பு துணைத் தோ்வினை எழுதினா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆரியூா்மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உளுந்தூா்பேட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் பாா்வையிட்டாா். மேலும் திருக்கோவிலூா் 10-ம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு வினாத்தாள் மையங்களையும் பாா்வையிட்டாா்.

தோ்வு எழுத்ச் செல்லும் அனைத்து மாணவா்களுக்கும் சோப்பினால் கைகளை கழுவிய பின்னரே அனுமதித்தனா். தோ்வு பணியில் ஈடுபட்ட பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கும் வெப்ப மானியால் பரிசோதனை மேற்கொண்டனா். மேலும் சமூக இடைவெளியினை கைபற்றி ஒவ்வொறு தோ்வு அறையிலும் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

10-ம் வகுப்பு எழுதிய மாணவா்களில் 03 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டனா். 2 மாணவா்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வு எழுத அனுமதித்தனா். சொல்வதை எழுதுபவா் கோரிய மாற்றுத் திறனாளி மாணவா்கள் மற்றும் சொல்வதை எழுதுபவராக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு கோவிட் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றினை தோ்வு மையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.