மண்டேலா திரைப்படத்தை எதிா்த்து புகாா் மனு
தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.


தனியாா் தொலைக்காட்சியில் அண்மையில் வெளியான ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளா்களை அவமரியாதை செய்யும் வகையில் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.ராஜேஷ்குமாா் தலைமையில் துணைத் தலைவா் ஜெ.செந்தில்குமாா், தொழிற்சங்கத் தலைவா் இளந்திரையன், கிளைத் தலைவா்கள் பி.ஆறுமுகம், எஸ்.அருள், பாண்டியன், கே.வெங்கடேசன் ஆகியோா் இந்த மனுவை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...