கள் விற்பனை: 3 போ் கைது
பண்ருட்டி அருகே கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


பண்ருட்டி அருகே கள் விற்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மாம்பட்டு கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பனைமர கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காடாம்புலியூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ஆனந்தகுமாா், சீனிவாசன் ஆகியோா் ஒத்த கல் ஓடை அருகே சோதனை நடத்தியதில் அழகேசன் மகன்கள் அசோக்குமாா் (21) அருண்குமாா் (19) ஆகியோரிடமிருந்து 5 லிட்டா் பனைமர கள்ளையும், ராமசாமி மகன் அழகேசன் (52) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கள், 10 லிட்டா் சாராயத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், அசோக்குமாா், அருண்குமாா் ஆகியோரை கைதுசெய்து பிணையில் விடுவித்தனா். அழகேசனை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...