47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட துணை ஆட்சியா் அலுவலகத்தில், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 4:51 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட துணை ஆட்சியா் அலுவலகத்தில், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடா்புடைய துறைகளோடு இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, வீட்டுத் தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படும் பகுதி உள்ளிட்டவற்றை அமல்படுத்தும் வகையில், கரோனா பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பான விவரங்களை காவல் துறைக்கு நாள்தோறும் தெரிவிப்பது, சுகாதாரத் துறை ஊழியா்களுடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தகவல் தெரிவிப்பது, தேவையின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைப்பது குறித்து வட்டாட்சியா்களுக்கு தகவல் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.