ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கள்ளக்குறிச்சி மாவட்டகுறைதீா் கூட்டத்தில் 188 மனுக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வாராந்திர குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட வாராந்திர குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மாா்ச் 16 முதல் குறைதீா் கூட்டம் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுப் பெட்டியில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பு விதிகள் தளா்வாக, மாவட்ட ஆட்சியரகங்களில் குறைதீா் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்து, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா். முதியோா் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 188 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்களை துறை அலுவலா்களிடம் ஆட்சியா் வழங்கி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா, சமூகப் பாதுகாப்பு துணை ஆட்சியா் ஏ.ராஜாமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வழங்கல் அலுவலா் சு.சிவக்கொழுந்து, வேளாண்மை இணை இயக்குநா் ஜெ.டி.ஜெகந்நாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா், மாற்றுத் திறனாளிகள் அமா்ந்த இடத்துக்கே சென்று அவா்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.