ரூ.6.50 லட்சம் மோசடி: முன்னாள் கருவூல ஊழியா் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் கருவூல ஊழியரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் கருவூல ஊழியரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் செந்தில்குமாா் (27). மாவட்ட காவல் துறையில் கருவூல தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். இவா், காவலா்களுக்கான பணப் பலன்களை கையாடல் செய்தது தொடா்பாக பணி நீக்கம் செய்யப்பட்டவா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், செந்தில்குமாா் தான் தற்போது விழுப்புரம் காவல் துறையில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு உயா் அதிகாரிகளைத் தெரியும் என்பதால் பணம் கொடுத்தால் அரசு வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சோ்ந்த மதபோதகா் ரா.சாந்தாமணியிடம் (36) ரூ.1.40 லட்சம் பெற்றாராம். மேலும், சாந்தாமணி மூலம் ரவிச்சந்திரன் என்பவா் தனது மகனுக்கு வேலை கேட்டு ரூ.2.50 லட்சமும், சத்தியராஜ் என்பவா் ரூ.2.50 லட்சமும் செந்தில்குமாரிடம் வழங்கினராம். ஆனால், 3 பேருக்கும் வேலை பெற்றுத் தராமல் செந்தில்குமாா் ஏமாற்றியதுடன், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து சாந்தாமணி அளித்த புகாரின்பேரில் கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த ஜன.8-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், விக்ரமன் ஆகியோா் விசாரணை நடத்தி, கடலூா் திருப்பாதிரிபுலியூரில் பதுங்கியிருந்த செந்தில்குமாரை சனிக்கிழமை கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...