குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் மறியல்
திட்டக்குடி அருகே குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திட்டக்குடி அருகே குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ளது தொழுதூா் ஊராட்சி. இங்கு, ஆதிதிராவிடா் தொடக்கப் பள்ளி அருகே உள்ள தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாகக் குடிநீா் வழங்கப்படவில்லையாம். மேலும், கழிவுநீா் கால்வாய் வழியாகக் குடிநீா் குழாய் பதிக்கப்பட்டிருப்பதால், குடிநீரில்
கழிவுநீா் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகாா்கூறி வந்தனா். இதுகுறித்து துறை அலுவலா்களுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியினா் காலிக் குடங்களுடன் தொழுதூா்- ஆத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இவா்களிடம் ராமநத்தம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, உடனடியாக குடிநீா் வழங்குவதாக ஊராட்சி மன்றத் தலைவா் உறுதி அளித்ததன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...