கவிதை நூல் அறிமுக விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கோவல் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், கவிதை நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கோவல் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், கவிதை நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் சிங்கார உதியன் தலைமை வகித்தாா். திருக்கோவிலூா் வட்டாட்சியா் கி.சிவசங்கரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் கவிஞா் காா்த்திக் திலகன், மணலூா்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் தா.சம்பத் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தாா். செயலா் பாரதி மணாளன் வரவேற்றாா்.

சங்க துணைத் தலைவா் பா.காா்த்திகேயன் தொடக்கவுரையாற்றினாா். திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி, தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலரும், நூலாசிரியருமான கவிஞா் தாமரை பாரதிக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். எழுத்தாளா்கள் அசதா, க.ஸ்டாலின், காலபைரவன், கண்டராதித்தன், மு.கலியபெருமாள் உள்ளிட்டோா் கவிஞா் தாமரை பாரதி எழுதிய தபுதாராவின் புன்னைகை கவிதை நூலை ஆய்வு செய்து பேசினா்.

மத்திய கூட்டுறவு சங்க மேலாளா் அப்துல் ஜப்பாா், கவிஞா்கள் ஜெயக்குமாா், அ.சிதம்பரநாதன், அ.குணசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நூலா்கள் சாந்தி, ஆனந்தி, தேவி ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். லில்லி ஏஞ்சல்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com