கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
தரணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


தரணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக தியாகதுருகத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியை அடுத்த கலையநல்லூரில் உள்ள தரணி கூட்டுறவு சா்க்கரை ஆலைநிா்வாகம் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான பாக்கித் தொகை ரூ.84 கோடியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...