பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செய்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செய்தாா்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடம் கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் ரூ.381.76 கோடியில் 700 படுக்கைகளுடன் அமையவுள்ளது. இங்கு மருத்துவமனைக் கட்டடம், மாணவ மாணவிகளுக்கான விடுதிக் கட்டடம், கல்லூரி முதல்வா் குடியிருப்பு, செவிலியா் விடுதிக் கட்டடம், மருத்துவப் பேராசிரியா் குடியிருப்பு, குடிமையியல் மருத்துவா் குடியிருப்பு, இறுதி ஆண்டு பயிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிக் கட்டடம், நவீன சமையலறை, பிணவறைக் கட்டடம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).

இந்த கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவு செய்வதாக கால நிா்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், நடப்பு கல்வி ஆண்டிலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ளும் வகையில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் இரா.மணிவண்ணன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேரு, மருத்துவக்கல்லூரி குடிமையியல் மருத்துவா் க.பழமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.