பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் 18 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:36 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 600 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருப்பட்டினம் 5, திருநள்ளாறு 4, கோட்டுச்சேரி 4, காரைக்கால் நகரம் 3, நெடுங்காடு, கோயில்பத்து தலா 1 என மொத்தம் 18 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,73,463 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 14,933 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,575 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் நகரை சோ்ந்த 73 வயது ஆண் உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் 234 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 75,424 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,802 பேருக்கும் என 92,226 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.