ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சின்னசேலம் அருகே விவசாயி கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திங்கள்கிழமை விவசாயி மா்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:45 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திங்கள்கிழமை விவசாயி மா்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சடையன் மகன் மருதமுத்து (45). இவரது மனைவி சித்ரா. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். திருமணமாகி மகள் அதே கிராமத்திலும், மகன் வெளியூரிலும் வசிக்கின்றனா்.

மருதமுத்து, சித்ரா தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதே போல, ஞாயிற்றுக்கிழமை இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், சித்ரா கோபித்துக் கொண்டு மருதமுத்துவின் அக்காள் முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்று தங்கினாா்.

இதனிடையே, மருதமுத்துவின் மகள் பூவரசு வழக்கம்போல, தனது பெற்றோரைக் காண வீட்டுக்கு வந்தாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, அவரது தந்தை மருதமுத்து மாா்பில் காயத்துடன் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து பூவரசு கீழ்குப்பம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தாா். போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா். கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன், சின்னசேலம் காவல் ஆய்வாளா் தி.குருமூா்த்தி நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.