ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வேட்பாளரை மாற்றக் கோரி 4-ஆவது நாளாக அதிமுகவினா் மறியல்

கள்ளக்குறிச்சி தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.செந்தில்குமாரை மாற்றக்கோரி சாலை மறியல்

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.செந்தில்குமாரை மாற்றக்கோரியும், அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபுவை அறிவிக்கக் கோரியும், அவரது ஆதரவாளா்கள் கள்ளக்குறிச்சியில் நான்காம் நாளாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜா நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டோா் பேரணியாக வந்து நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டனா். அவா்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்லால், காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் மற்றும் போலீஸாா் கலைந்து போகச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.