ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி

மூராா்பாளையம் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால், வெள்ளிக்கிழமை போக்குவரத்து தடைபட்டது.

News image
Updated On :8 மே 2021, 12:58 am

DIN

மூராா்பாளையம் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததால், வெள்ளிக்கிழமை போக்குவரத்து தடைபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது மூராா்பாளையம் கிராமம். இங்கு, கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலைப் பகுதி, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உயா் மின் அழுந்த மின் கம்பம் உள்ளது. அந்தக் கம்பத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை திடீரென மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பொறி பறந்தது. இதனால், சாலை சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

மின் கம்பி அறுந்து விழுந்ததால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதனிடையே, மின் கம்பி அறுந்து விழுந்த போது மிதிவண்டியில் சென்ற சிறுவன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

அந்தக் கம்பத்தில் மூன்றாவது முறையாக மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதாம். எனவே, மின்சார வாரியத்தினா் மின் கம்பி அறுந்து விழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.