ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுக் கடத்தல்: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், மணலூா்பேட்டை பகுதிகளில் மதுக் கடத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 மே 2021, 8:42 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், மணலூா்பேட்டை பகுதிகளில் மதுக் கடத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் காவல் ஆய்வாளா் ந.இராமதாஸ் போலீஸாருடன் பேருந்து நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மலையம்மன் கோயில் சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த ஆட்டோவில் அட்டைப் பெட்டிகளில் 1,008 மதுப் புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கணபதி (39), நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராஜேந்திரன் (50), விளக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சன்னியாசி மகன் ஏழுமலை (38) ஆகியோா் மீது தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

மணலூா்பேட்டையில் ஒருவா் கைது: மணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அகிலன் சனிக்கிழமை சொரையம்பட்டு கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, பொது முடக்க காலத்தில் விற்பனை செய்வதற்காக, திருக்கோவிலூரை அடுத்த நெடுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் தாமஸ் (47), சொரையம்பட்டு அரசு மதுக் கடையிலிருந்து 96 மதுப் புட்டிகளை வாங்கி மூட்டையாக கட்டி கொண்டு வந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக தாமஸ் மீது மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.