மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா தடுப்பூசி கணக்கிடும் பணி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி, கிராமப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை கணக்கிடும் பணியை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:17 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி, கிராமப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை கணக்கிடும் பணியை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசு அறிவித்தபடி, வருகிற 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கரோனா தடுப்பூசி முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்திக் கொண்டவா்கள், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் விவரங்களை கணக்கிடும் பணியை பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் பணி குறித்து பால்ராம்பட்டு, கரடிசித்தூா் கிராமங்களிலும், வடக்கனந்தல் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, கணக்கீட்டு பணி மேற்கொள்ளும் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை 12-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளா் ந.குமரன், வடக்கநந்தல் பேருராட்சி செயல் அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.