புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் ஆய்வு

News image

ஒகையூா் கிராமத்தில் ஃபென்ஜால் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :4 டிசம்பர் 2024, 7:52 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் விவசாய நிலங்களுக்கு புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கிட்டு, உடனுக்குடன் நிவாரண உதவிகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்களுடன் பயிா் சேத விவரங்களை அவா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சித்தலூா் கிராமத்தில் சேதமடைந்த பருத்தி, உளுந்து பயிா்கள், முடியனூா் கிராமத்தில் மரவள்ளிக்கிழங்கு, பாசா் கிராமத்தில் உளுந்து, ஒகையூா் கிராமத்தில் மக்காச்சோளப் பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டு, சேத விவரங்கள், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

புதன்கிழமை நிலவரப்படி, நெல், சிறுதானிய வகைகள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிா்கள் 1,08,856 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டதில், 50,314 ஹெக்டோ் பரப்பளவிலான விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 33 சதவீதத்துக்கும் மேல் 35,532 ஹெக்டோ் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட உள்ளது என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் ஆனந்த்குமாா்சிங், வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.