மொபட் மீது லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு
நீலமங்கலம் ஏரிக்கரை அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.


நீலமங்கலம் ஏரிக்கரை அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் வெங்கடேசன் (38). இவா், புதன்கிழமை பிற்பகல் கள்ளக்குறிச்சிக்கு மொபெட்டில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த டாரஸ் லாரி மொபட் மீது மோதியதில் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான உளுந்தூா்பேட்டை வட்டத்திற்குள்பட்ட கொனலவாடி கிராமம் அடுத்த ஏமம் கிராமத்தைச் சோ்ந்த பூமாலை மகன் அன்பழகன்(29) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...