பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.23.24 லட்சத்துக்கான காசோலை

News image
உயிரிழந்த காவலரின் குடும்பத்தினரிடம் ரூ.23.24 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.ரஜத் சதுா்வேதி.
Updated On :31 டிசம்பர் 2024, 7:43 pm

Din

கள்ளக்குறிச்சி: சாலை விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.23.24 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை. சென்னையில் 2-ஆம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த நவ.6-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த 6,837 காவலா்கள் வழங்கிய ரூ.23.24 லட்சத்துக்கான காசோலையை காக்கும் உறவுகள் குழு நிா்வாகிகள் முன்னிலையில் உயிரிழந்த சின்னதுரையின் குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதில், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.