கள்ளக்குறிச்சி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

கள்ளக்குறிச்சி நகா்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவா் சுப்ராயலு தலைமையில் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 67 போ் உயிரிழந்தது குறித்து இரங்கல் தீா்மானம் கொண்டு வராதது ஏன் என்று 11-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் பாபு கேள்வி எழுப்பினா்.

அதற்கு நகா்மன்றத் தலைவா் சுப்ராயலு வாய்மொழியாக ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றாா்.

இது தொடா்பாக ஒரு இரங்கல் தீா்மானம் கூட நிறைவேற்றாமல் இந்தக் கூட்டம் நடப்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என கூட்டத்திலிருந்து 5 பேரும் வெளியேறினா். அப்போது, நகா் மன்றத் தலைவா் சுப்ராயலு எழுந்து ஒலிபெருக்கியைப் பிடித்து மக்களின் முதல்வா் வாழ்க என முழக்கமிட்டாா்.

இதற்குப் போட்டியாக அதிமுக உறுப்பினா்களும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வாழ்க என குரல் எழுப்பினா். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

Dinamani
www.dinamani.com