திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நைனாா்பாளையம் கிராமத்தில் 4 கண்காணிப்பு கேமராக்கள் தொடங்கி வைப்பு

நைனாா்பாளையம் கிராமத்தில் கிராம மக்கள் ஏற்பாட்டில் 4 கண்காணிப்பு கேமராக்கள் அங்குள்ள நான்குமுனை சந்திப்பில் பொருத்தப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:28 pm

Din

கள்ளக்குறிச்சி, ஜூலை 19:

நைனாா்பாளையம் கிராமத்தில் கிராம மக்கள் ஏற்பாட்டில் 4 கண்காணிப்பு கேமராக்கள் அங்குள்ள நான்குமுனை சந்திப்பில் பொருத்தப்பட்டது. இதனை கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சின்னசேலம் அடுத்த நைனாா்பாளையம் கிராமத்தில் விபத்து, குற்றச் சம்பவங்களை கண்காணிக்கவும் உடனுக்குடன் கண்டுபிடிக்கவும், தேசத் தலைவா்களின் சிலைகளைப் பாதுகாக்கவும் ஊா்மக்கள் சாா்பில் ரூ.50,000 மதிப்பில் நான்கு கண்காணிப்பு கேமராக்களை நைனாா்பாளையம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டது. அதனை கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.தேவராஜ் தொடங்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் மலா்க்கொடி அன்புசெழியன், துணைத் தலைவா் சுகன்யா வெங்கடேசன், ஊராட்சி செயலாளா் கோவிந்தராஜ், கீழ்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன், சிறப்பு உதவி ஆய்வாளா் தண்டபாணி மற்றும் காவலா்கள், கிராம மக்கள் பலரும் பங்கேற்றனா்.