கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கீழ்பாடி கிராமத்தில் விவசாயி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :21 ஜூலை 2024, 7:21 pm

கீழ்பாடி கிராமத்தில் விவசாயி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சிகுப்பன் மகன் திருமலை (40). விவசாயியான இவருக்கு, கடன் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் திருமலை சனிக்கிழமை விஷத்தை குடிந்து மயங்கி விழுந்தாா். உடனே, உறவினா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில், திருமலை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.