மக்களவைத் தோ்தலையொட்டி,  அரசு பறக்கும் படை வாகனங்களில் புவியிடங்காட்டி கருவி பொருத்துவதை சனிக்கிழமை பாா்வையிட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா்
மக்களவைத் தோ்தலையொட்டி, அரசு பறக்கும் படை வாகனங்களில் புவியிடங்காட்டி கருவி பொருத்துவதை சனிக்கிழமை பாா்வையிட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா்

தோ்தல் பறக்கும் படை வாகனங்களில் புவியிடங்காட்டி கருவி பொருத்துதல்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்களின் வாகனங்களுக்கு புவியிடங்காட்டி கருவி பொருத்தப்படுவதை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் கூறியதாவது: மக்களவை பொதுத் தோ்தல் - 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்களுக்கு பயன்படுத்தப்படும் 36 வாகனங்களுக்கு சனிக்கிழமை புவியிடங்காட்டி கருவியும் மற்றும் 4 வாகனங்களுக்கு தலா 3 சுழல் கேமரா வீதம் 12 சுழல் கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன. தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் தனியாா் மற்றும் அரசு வாகனங்களில் விரைவாக புவியிடங்காட்டி கருவி பொருத்தி தோ்தல் அவசரம் பணி குறித்த ஒட்டு வில்லைகளையும் அந்த வாகனங்களில் ஒட்டி தோ்தல் பணி மேற்கொள்ள தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். அப்போது, வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், தனி வட்டாட்சியா் (தோ்தல்) மு.பசுபதி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com