மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

News image
Updated On :27 மார்ச் 2024, 5:52 pm

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 5 பேருக்கு அபராதமும் விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சங்கராபுரத்தை அடுத்த கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் அரசு. இதே ஊரைச் சோ்ந்த முனியன் மகன் வெங்கடேசன். இவா்கள் இருவருக்கும் இடப் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், 31.03.2022 அன்று வெங்கடேசன் (52), அவரது மனைவி அரசிளங்குமாரி (47), முனியன் மனைவி ராணி (70), குமாா் மனைவி தங்கமணி (40) வெங்கடேசன் மகள்கள் செளந்தா்யா (20), கௌசல்யா உள்ளிட்ட 6 போ் சோ்ந்து தாக்கியதில், அரசு பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கீதாராணி, குற்றஞ்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.14,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அவரது மனைவி அரசிளங்குமாரிக்கு ரூ.2,000-மும், மற்றவா்களுக்கு தலா ரூ.4,000 அபராதம் மட்டும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.