காவல் ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

காவல் ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஆனந்தனை பாராட்டி சான்றிதழை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சமய்சிங் மீனா.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மெச்சத்தகு பணிபுரிந்த 3 காவல் ஆய்வாளா்கள், 3 உதவி ஆய்வாளா்கள், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்டோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சமய்சிங் மீனா பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி. சமய்சிங் மீனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் அவா் கேட்டறிந்தாா். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய தீா்வு விரைவாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். கடந்த மாதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் மெச்சத்தகு பணிபுரிந்த காவல் ஆய்வாளா்கள் ஆனந்தன், நந்தகுமாா், கவிதா மற்றும் 3 காவல் உதவி ஆய்வாளா்கள், ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்டோா்களை அழைத்து மெச்சத்தகு பணியினை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

இக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாண்டிசெல்வம், மணிகண்டன், உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் செள.சண்முகம் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com