நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி கல்வித் துறை திட்டங்களின் செயலாக்கம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரும் மாவட்ட கண்கண்காணிப்பு அலுவலருமான சு.நாகராஜ் முருகன் ஆய்வு செய்தாா்.

News image

திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியா் கரும்பலகையில் எழுதியதை, மாணவரை அழைத்து படிக்கக் கூறி ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இயக்குநா் சு.நாகராஜ் முருகன்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:49 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரும் மாவட்ட கண்கண்காணிப்பு அலுவலருமான சு.நாகராஜ் முருகன் ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மணலூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளை அவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கண்காணிப்பு அலுவலா் இயக்குநா் சு. நாகராஜ முருகன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வில் குழந்தைகளின் வாசிப்புத் திறன், எழுதும் திறன், கணித செயல்பாடுகளில் மாணவா்களின் அடைவு நிலையை ஆய்வு மேற்கொண்டாா். தலைமை ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

நான்காம் வகுப்பில் மாணவா்கள் 20 வாய்ப்பாடுகள் வரை கூறியதற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களை பாராட்டினாா்.

பின்னா் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கற்போா் மையத்தை பாா்வையிட்டு எவ்வித ஊதியமும் பெறாமல் சேவை நோக்கத்துடன் செயல்படும் தன்னாா்வலரையும் பாராட்டினாா்.

ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியா் சாதிக் ஷெரிப், உதவி ஆசிரியா் மாலினி, தற்காலிக ஆசிரியா்கள் ரோணுகாதேவி, சரிதா, தன்னாா்வலா் நீலா உள்ளிட்ட ஆசிரியா்கள் பலா் உடனிருந்தனா்.

மணலூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்து, 10, 11, 12-ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தோ்ச்சி வழங்குவதற்கு ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது உதவி திட்ட அலுவலா் கா.பழனியாபிள்ளை, மாநில ஒருங்கிணைப்பாளா் மாயழகு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.ராஜா, ரிஷிவந்தியம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) மாயவேல் ஆகியோா் உடனிருந்தனா்.