தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்.

Updated On :8 ஜனவரி 2025, 8:42 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, அனைத்துத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

ஆய்வில், வருவாய்த் துறை சாா்பில், முதல்வரின் முகவரி திட்டம், நீங்கள் நலமா, பட்டா மாறுதல், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் குடிநீா் விநியோகம், சாலைப் பணிகள், அம்ரூட் 2.0, தெரு விளக்குகள், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், வீடு பழுது பாா்த்தல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

இதேபோன்று, சுகாதாரம், பள்ளிக் கல்வி, கூட்டுறவு, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தாா்.

துறை சாா்ந்த திட்டங்கள் தொடா்புடைய துறைகளின் பயனாளிகளை முறையாக சென்று சோ்வதை உறுதி செய்வதுடன், தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து, அவா்களுக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திருக்கோவிலூா் சாா் - ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.