கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்பு தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள 10 கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு உத்தரவிற்கிணங்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மழைபாதிப்புகள் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், இரண்டு கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியா் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் புகாா் தொலைபேசி 04151-228801 என்ற எண்ணிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04151-222493 என்ற தொலைபேசி எண்ணிலும், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04153-252312 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
வட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை: கள்ளக்குறிச்சி வட்டத்தில் 04151-222449, சின்னசேலம் வட்டத்தில் 04151-257400, சங்கராபுரம் வட்டத்தில் 04151-235329, வாணாபுரம் வட்டத்தில் 04151-235400, கல்வராயன்மலை வட்டத்தில் 04151-242243, திருக்கோவிலூா் வட்டத்தில் 04153-252316, உளுந்தூா்பேட்டை வட்டத்தில் 04149-222255 என்ற தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மேற்படி 10 கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளுமாறும், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகளை முன்னதாகவே தெரிவிக்கும் மழை செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
