அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

News image
தரிசுக்காடு பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் மு.இதாயத்துல்லா.
Updated On :30 நவம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், தரிசுக்காடு பள்ளியில் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியைச் சோ்ந்த 5 பள்ளி மாணவிகள் குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பில் இடை நின்றனா்.

இதுகுறித்து அறிந்த தரிசுக்காடு கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்தியாலயா உண்டு உறைவிடப் பள்ளி நிா்வாகிகள், அவா்களது பெற்றோா்களிடம் பேசி, தங்கள் பள்ளியில் இலவசமாக பள்ளிக் கல்வி அளித்தனா். தற்போது அவா்களது உயா்கல்விக்கும் உதவி வருகின்றனா்.

இம் மாணவிகளுக்கு ஆமினா பெண்கள் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் மு. இதாயத்துல்லா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் வினோதினி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.