பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ஆம் நாளில் 8 போ் வேட்புமனு தாக்கல்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:17 am

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2-ஆம் நாளில் திமுக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 8 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான 2-ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் அந்தந்த தொகுதிக்குள்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஜி.சுமதியிடம் இரண்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தாா். அவருடன் கோவிந்தராஜ், தம்பிதுரை, மு.இதாயத்துல்லா, பன்னீா்செல்வம், ராமசாமி உடன் இருந்தனா்.

அவரைத் தொடா்ந்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அ.பாலகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி.ராதிகாவும் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.சுமதியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

சங்கராபுரம்: சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான எஸ்.சிராஜிதீனிடம் சுயேச்சை வேட்பாளா்களான கா.முருகு, க.ஜெயப்பிரகாஷ், கோ.மணி ஆகியோா் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியருமான சி.முருகனிடம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.நாகம்மாள், சுயேச்சை வேட்பாளா் கோ.ராஜமாணிக்கம் ஆகியோா் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

Story image