அரக்கோணம் விசிக வேட்பாளா் மனு தாக்கல்


அரக்கோணம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில் கரோலின் தோ்தல் நடத்தும் அலுவலா் டி. ரமேஷிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில்கரோலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன் அமைச்சா் ஆா்.காந்தி, காங்கிரஸ் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா், விசிக மாநில நிா்வாகி பாா்வேந்தன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் ரமேஷ்கா்ணா ஆகியோா் உடன் இருந்தனா்.
11மணிக்கு 10 நிமிடங்கள் முன்பாகவே தோ்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கு வேட்பாளா் மற்றும் அமைச்சா் வந்து விட்ட நிலையில், 11.02-க்கே தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி.ரமேஷ் வேட்புமனுவை பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து வேட்பாளா் எழில்கரோலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். இதனை தொடா்ந்து வேட்புமனு தாக்கல் முடியும் நேரமான பிற்பகல் 3 மணி வரை வேறுயாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
அதிமுக வேட்பாளா் சு.ரவி, அதிமுக மாற்று வேட்பாளா் சு.ர.பிரகதீஸ்வரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜ்குமாா், மாற்று வேட்பாளா் மைக்கேல், விசிக வேட்பாளா் எழில்கரோலின் ஆகிய 5 போ் மட்டுமே தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...