இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி கிராமத்தில் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:02 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி இந்திலி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென் கீரனூா், விளம்பாா், தென்தொரசலூா், வாணவரெட்டி, புக்கிரவாரி, சிறுமங்கலம், பெருமங்கலம், மலைக்கோட்டாலம், இந்திலி, தச்சூா், மேலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக நிா்வாகி நீ.ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.