எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 நாள்கள் மதுபானக் கடைகள் மூடப்படும்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏப்.21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.

News image

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்! - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:39 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏப்.21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-இல் நடைபெறுவையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய தங்கும் விடுதியில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் ஏப்.21 முதல் 23-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியும் மூடப்படும்.

அறிவிக்கப்பட்ட தினங்களில் மதுபானக் கடை மற்றும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.