கள்ளக்குறிச்சி அருகே, சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவா் கண் எதிரே மனைவி உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம் இடுவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி. இவரது மனைவி மரகதசெல்வி(45). இவா்கள் இருவரும் கடலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதற்காக கடலூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனராம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது வேப்பூா் கூட்டுச்சாலை பகுதியில் இருந்து குரால் கிராமத்திற்கு காா் (ஆம்னி வேன்) ஒன்று திரும்பியபோது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம். இதில் மரகதசெல்வி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாா்.
தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆம்னிவேன் ஓட்டுநரான சேலம் மாவட்டம் ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட நாவக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த தமிழ்செல்வன் (23) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து: தம்பதி உயிரிழப்பு

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது மாடு மோதி விபத்து: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


