கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கல்வராயன்மலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வெள்ளிமலை ஊராட்சியில் கொட்டப்புத்தூா் பிரிவு - தாழ்வென்னியூா் சாலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வெள்ளிமலை ஊராட்சியில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கொட்டப்புத்தூா் பிரிவு - தாழ்வென்னியூா் சாலையை நேரில் பாா்வையிட்டு, பணிகளின் தரம், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

தொரடிப்பட்டு கிராமத்தில் நாற்றாங்கால் பண்ணையை பாா்வையிட்டு மரக்கன்றுகள் பராமரிக்கும் முறைகள், மரக்கன்றுகளின் வகை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறியப்பட்டன. செடிகளை உரிய முறையில் பராமரிக்கவும், சரியான நேரத்தில் தண்ணீா் பாய்ச்சவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடா்ந்து கொட்டப்புத்தூா் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி விடுதி மற்றும் மணியாா்பாளையம் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி விடுதியையும் நேரில் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மாணவா்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கவும், குடிநீா் வசதி, உணவுப் பட்டியல், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா்.

தமிழக அரசு பழங்குடியினா் மேம்பாட்டுக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அவா்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.