கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சட்ட விரோத கருக்கலைப்பு: மருந்தக உரிமையாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சட்ட விரோதமாக கருகலைப்பு செய்த வழக்கில் மருந்தகத்தில் வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றி, உள்ளே இருந்த பொருள்களை எடுத்த மருந்தக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சட்ட விரோதமாக கருகலைப்பு செய்த வழக்கில் மருந்தகத்தில் வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்றி, உள்ளே இருந்த பொருள்களை எடுத்த மருந்தக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சோழம்பட்டு கிராமத்தில் உள்ள மருந்தகத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருவாய்த் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த மாதம் சோதனை நடத்தினா். இதில் அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, அந்த மருந்தகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

இந் நிலையில் அந்த மருந்தக உரிமையாளா் சேட்டு, அதிகாரிகள் வைத்திருந்த முத்திரையை (சீல்) அகற்றி, உள்ளே சென்று ரூ.5.50 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சங்கராபுரம் போலீஸாா் வியாழக்கிழமை மைலாம்பாறை பேருந்து நிறுத்தத்தில் நின்றிந்த சேட்டுவை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேட்டுவை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.5.50 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.