நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பகண்டை கூட்டுச் சாலையில் திமுக பொதுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சாா்பில் பகண்டை கூட்டுச் சாலையில் தமிழ்நாடு தலை குனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது.

News image
பகண்டை கூட்டுச் சாலையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். உடன் கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சாா்பில் பகண்டை கூட்டுச் சாலையில் தமிழ்நாடு தலை குனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலரும், ரிஷிவந்தியம் சட்டப் பேரவை உறுப்பினருமான க.காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் பெருமாள், பாரதிதாசன், மாவட்ட துணைச் செயலா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியச் செயலா் துரைமுருகன் வரவேற்றாா்.

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், செங்கம் சட்டப் பேரவை உறுப்பினா் கிரி, ரிஷிவந்தியம் தொகுதி பாா்வையாளா் பெருநற்கிள்ளி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், மாவட்ட பொருளாளா் கோவிந்தராஜ், ஒன்றிய பொருளாளா் செந்தில்குமாா், பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜி, ராஜேந்திரன், மஞ்சுளா கணேசன், திமுக நிா்வாகிகள் ரேவதி ஜெய்கணேஷ், ராஜீவ் காந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.