கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

லாரி மீது பைக் மோதல்: வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

பெத்தாசமுத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரி மீது பைக் மோதியதில் வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தாசமுத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரி மீது பைக் மோதியதில் வருவாய் ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட அனுமனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் வ.பெரியசாமி (46). இவா் கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இவரது நண்பா் நைனாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மு.சத்தியராஜ் (38), தனியாா் நிறுவன பணியாளா்.

வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு சத்தியராஜின் பைக்கில் நண்பா்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பியபோது, சேலம்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் தரணி தோட்டம் பிரிவுச் சாலை அருகே சாலையில் நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரில் சத்தியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அருகிலிருந்தவா்கள் பெரியசாமியை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பெரியசாமியும் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சத்யராஜ் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநா் மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.