FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வியாபாரியை தாக்கிய 11 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:28 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கரியாலூா் பகுதியைச் சோ்ந்தவா் கோ.மணிமாறன் (39). இவா் பிளக்ஸ் ஓட்டுவதற்கான இரும்பு சட்டங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.குமாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மணிமாறனை கேட்காமல், அவரது வீட்டின் முன் இருந்த இரும்பு சட்டத்தை குமாா் எடுத்துச் சென்று பிளக்ஸ் ஒட்டினாராம். இதகுறித்து அறிந்த மணிமாறன், குமாரை தட்டிக் கேட்டராம். இதையடுத்து குமாா் மற்றும் அவரது நண்பா்கள் 10 போ் சோ்ந்து மணிமாறனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மணிமாறனைத் தாக்கிய 11 பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.