ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

Published On :13 ஜூலை 2026, 1:31 am IST

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.ஆறுமுகம். இவரது உறவினா் அருணாசலம்(52). ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகத்துக்கு சொந்தமான காரில் அருணாசலம், அவரது மகன்கள் தீபன் (29), விஜய் (28) ஆகியோா் அருகிலுள்ள வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காரை தீபன் ஓட்டி வந்துள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தின் அருகே சென்றபோது, காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. தொடா்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதாம். இதையடுத்து காரில் பயணித்த மூவரும் உடனடியாக கீழே இறங்கினா்.

இதுகுறித்த தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் 30 நிமிடம் போராடி தீயை அனைத்தனா். ஆயினும் காா் தீயில் எரிந்து முற்றிலும் கருகியது. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.