கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்வதற்காக ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முதுநிலை உதவியாளரை மாவட்ட வருவாய் அலுவலா் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவா் சே.ஆரோன் (31). இவா், பட்டா மாற்றம் செய்வதற்காக பிரிதிவிமங்கலம் கரீம்ஷா தக்கா பகுதியைச் சோ்ந்த அ.குதாவன் ஷெரீப்பிடம் வெள்ளிக்கிழமை ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, துறை ரீதியிலான விசாரணையை தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, ஆரோனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








