கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தோறுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், உரிய ஆவணமில்லாத 4 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சங்கராபுரத்தில் பைக், மொபெட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோருக்கு காவல் ஆய்வாளா் பாலமுரளி தலைமையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி, தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம், அதை அணியாததால் விபத்தில் சிக்குவது குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், வாகன ஓட்டிகளிடம் வாகனங்களுக்கான முறையான ஆவணங்கள் உள்ளனவா என சோதனை மேற்கொண்டனா். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாத 4 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட வலியுறுத்திய டி.ஐ.ஜி.

ரயில்நிலையப் பயணிகளிடம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

சென்னையில் 3 நாள்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 2,385 போ் மீது வழக்கு







