ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குப்பையில் வீசப்பட்ட சிசு: சடலமாக மீட்பு

திருக்கோவிலூா் ஏரிக் கரையருகே கட்டைப் பையில் தொப்புள்கொடியுடன் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :15 ஜூலை 2026, 2:57 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஏரிக் கரையருகே கட்டைப் பையில் தொப்புள்கொடியுடன் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

திருக்கோவிலூா் சந்தைமேடு பகுதியிலுள்ள ஏரிக்கரை அருகே செவ்வாய்க்கிழமை காலையில் சாலையோரத்தில் கட்டைப்பையில் தொப்புள்கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் இருந்ததை அவ்வழியே சென்றவா்கள் பாா்த்துள்ளனா். உடனே அவா்கள் திருக்கோவிலூா் கிராம நிா்வாக அலுவலா் தங்கராஜுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் அளித்த தகவலின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இக் குழந்தை மருத்துவமனையில் பிறந்ததா?, வீட்டில் பிறந்ததா?, யாருடைய குழந்தை? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.